• Mar 29 2024

பொன்னாடையும் வேண்டாம் பூமாலையும் வேண்டாம்-புதிய அரசியல் கலாசாரத்துடன் களமிறங்கிய திலகர் அணி!

Sharmi / Jan 30th 2023, 2:54 pm
image

Advertisement

தேர்தல் பிரச்சாரங்களின்போதும் சரி பின்னதாக அரசியல் செயற்பாடுகளின்போதும் சரி களத்தில் யாரும் யாருக்கும் பொன்னாடை இடவோ, பூமாலை சூட்டவோ அவசியமில்லை. சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன்சீட் கொண்டு அலங்காரங்கள் செய்யக்கூடாது. புத்தகம் கொடுப்போம்! பூங்கொத்துக் கொடுப்போம்! வரவேற்போம் எனும் புதிய அரசியல் கலாச்சாரத்துடன் மலையக அரசியல் அரங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்கும் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட அதிகாரம் பெற்ற முகவரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

மலையக அரசியல் அரங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினருமான கே. சுரேஷ்குமார் தலைமையில், அரங்கத்தின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவு படுத்தல் செயலமர்வு ஹட்டனில் ( 28/01) இடம்பெற்றது.

அரங்கத்தின் செயலாளரும் தலைமைத்துவ பயிற்றுவிப்பாளருமான நா. கிருஷ்ணகுமார், அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முகாமைத்துவ ஆலோசகருமான மயில்வாகனம் திலகராஜா ஆகியோர் வளவாளராகக் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த திலகர்,

மலையக அரசியல் அரங்கம் அறிவார்ந்த அரசியல் உரையாடலை உருவாக்குவது, ஆண்களுக்கு சமாந்திரமாக பெண்களுக்கும் அரசியலில் சமவாய்ப்பு வழங்குவது, மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை, முன்னெடுப்பது, அடுத்த தலைமுறைக்கான அரசியல் பாலமாக செயற்படுவது போன்ற இலக்குகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

அதனை ஆங்காங்கே நடைமுறைப்படுத்ததும் வகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலிய, நோர்வூட், கொட்டகலை, அக்கரப்பத்தனை ஆகிய பிரதேச சபைகளில் போட்டி இடுகின்றது. திருத்தம் செய்யப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தை புதிய பிரதேச சபைகளிலாவது நடைமுறைப்படுத்தும் இலக்குடன் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் பிரசாரத்தின்போது புதிய அரசியல் கலாசாரத்தினையும் அறிமுகம் செய்ய உள்ளது.

அரசியல்வாதிகளை பொன்னாடை இட்டு பூமாலை சூட்டி கடவுளுக்கு அடுத்த படியில் வைத்து அவர்களை ஊழல்வாதிகளாக்குவது சமூகமே. 90 சதவீதமான அரசியல்வாதிகள் தமக்கு மாலை சூட்டிமாறும், பொன்னாடை இடுமாறும் தான் வரும்போது பட்டாசு கொளுத்தி வரவேற்குமாறும் முன்கூட்டியே தனது எடுபிடிகளுக்கு பணம் கொடுத்து விடுவார்கள். இதனை ஏனைய 10 வீதமானோரும் பணம் கொடுக்காமலே தொடர்வர். நான் பலமுறை தடுத்தபோதும் தவிர்த்தபோதும் எனக்கும் மாலையும் பொன்னாடையும் இட்டுள்ளார்கள். அதன்போது அவர்களை அசௌகர்யப்படுத்தக் கூடாது என்பதற்காக ஏற்று கொண்டதுண்டு. அதே போல நான் அசௌகர்யப்பட்டதுமுண்டு. எனவே இவற்றை எல்லாம் தவிர்த்து ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி மலையகத்தை அழைத்துச் செல்லும் தேவைப்பாடு உள்ளது.

பொலித்தீன் அலங்காரங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு அதனை அபற்றாமல் அப்படியே விட்டுச் சென்று விடுவார்கள். அது சூழலை மாசுபடுத்தும். நாம் அதனை தவிர்க்க முன்வருதல் வேண்டும். துணிகளால் ஆன கட்சிக் கொடிகளை சின்னங்கள் இட்ட பதாகைகளைப் பயன்படுத்தலாம். பூமாலை, பொன்னாடைக்கு பதிலாக பூங்கொத்து, புத்தகங்கள் கொடுத்து வரவேற்கலாம். புத்தகம் என்பது அப்பியாசக் கொப்பிகளாகவும் இருக்கலாம். அதனைப் பெற்றுக் கொள்ளும் அமைப்பு அந்தப் பிரதேச வறிய மாணவர்களுக்கு பகரந்தளிக்கலாம்.

கவுத ரஜா ... ம்மய் ரஜா போன்ற அர்த்தமற்ற கோஷங்களை அரங்கம் தவிர்க்க வேண்டும். இங்கே யாருமே ராஜா வாக வரவில்லை. மக்களுக்கு சேவையாற்றவே வந்துள்ளோம். எனவே அதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.

"மலையக அரசியல் அரங்கம்  மாற்றத்திற்கான தெரிவு" "தளராது எங்கள் எண்ணம் தராசு எங்கள் சின்னம்" ஆகிய கோஷங்களை தேர்தல் பிரச்சாரங்களின்போது பயன்படுத்துவது, சுழற்சி முறையில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சபைகளில் அங்கம் வகிக்கும் வாய்ப்பினை வழங்குவது, வேட்பாளர்களின் சொத்து பொறுப்புக்களை தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கி அதன் பிரதிகளை சாட்சி கருதி M12M அமைப்புக்கு வழங்குவது போன்ற தீர்மானங்களும் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. ஊடகங்களுக்கு எவ்வாறு பேசுவது எனும் பயிற்சிகளும் துறை சார்ந்த வர்களைக் கொண்டு வழங்கப்பட்டது.



பொன்னாடையும் வேண்டாம் பூமாலையும் வேண்டாம்-புதிய அரசியல் கலாசாரத்துடன் களமிறங்கிய திலகர் அணி தேர்தல் பிரச்சாரங்களின்போதும் சரி பின்னதாக அரசியல் செயற்பாடுகளின்போதும் சரி களத்தில் யாரும் யாருக்கும் பொன்னாடை இடவோ, பூமாலை சூட்டவோ அவசியமில்லை. சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன்சீட் கொண்டு அலங்காரங்கள் செய்யக்கூடாது. புத்தகம் கொடுப்போம் பூங்கொத்துக் கொடுப்போம் வரவேற்போம் எனும் புதிய அரசியல் கலாச்சாரத்துடன் மலையக அரசியல் அரங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்கும் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட அதிகாரம் பெற்ற முகவரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார். மலையக அரசியல் அரங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினருமான கே. சுரேஷ்குமார் தலைமையில், அரங்கத்தின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவு படுத்தல் செயலமர்வு ஹட்டனில் ( 28/01) இடம்பெற்றது. அரங்கத்தின் செயலாளரும் தலைமைத்துவ பயிற்றுவிப்பாளருமான நா. கிருஷ்ணகுமார், அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முகாமைத்துவ ஆலோசகருமான மயில்வாகனம் திலகராஜா ஆகியோர் வளவாளராகக் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த திலகர்,மலையக அரசியல் அரங்கம் அறிவார்ந்த அரசியல் உரையாடலை உருவாக்குவது, ஆண்களுக்கு சமாந்திரமாக பெண்களுக்கும் அரசியலில் சமவாய்ப்பு வழங்குவது, மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை, முன்னெடுப்பது, அடுத்த தலைமுறைக்கான அரசியல் பாலமாக செயற்படுவது போன்ற இலக்குகளைக் கொண்டு இயங்கி வருகிறது.அதனை ஆங்காங்கே நடைமுறைப்படுத்ததும் வகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலிய, நோர்வூட், கொட்டகலை, அக்கரப்பத்தனை ஆகிய பிரதேச சபைகளில் போட்டி இடுகின்றது. திருத்தம் செய்யப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தை புதிய பிரதேச சபைகளிலாவது நடைமுறைப்படுத்தும் இலக்குடன் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் பிரசாரத்தின்போது புதிய அரசியல் கலாசாரத்தினையும் அறிமுகம் செய்ய உள்ளது.அரசியல்வாதிகளை பொன்னாடை இட்டு பூமாலை சூட்டி கடவுளுக்கு அடுத்த படியில் வைத்து அவர்களை ஊழல்வாதிகளாக்குவது சமூகமே. 90 சதவீதமான அரசியல்வாதிகள் தமக்கு மாலை சூட்டிமாறும், பொன்னாடை இடுமாறும் தான் வரும்போது பட்டாசு கொளுத்தி வரவேற்குமாறும் முன்கூட்டியே தனது எடுபிடிகளுக்கு பணம் கொடுத்து விடுவார்கள். இதனை ஏனைய 10 வீதமானோரும் பணம் கொடுக்காமலே தொடர்வர். நான் பலமுறை தடுத்தபோதும் தவிர்த்தபோதும் எனக்கும் மாலையும் பொன்னாடையும் இட்டுள்ளார்கள். அதன்போது அவர்களை அசௌகர்யப்படுத்தக் கூடாது என்பதற்காக ஏற்று கொண்டதுண்டு. அதே போல நான் அசௌகர்யப்பட்டதுமுண்டு. எனவே இவற்றை எல்லாம் தவிர்த்து ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி மலையகத்தை அழைத்துச் செல்லும் தேவைப்பாடு உள்ளது.பொலித்தீன் அலங்காரங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு அதனை அபற்றாமல் அப்படியே விட்டுச் சென்று விடுவார்கள். அது சூழலை மாசுபடுத்தும். நாம் அதனை தவிர்க்க முன்வருதல் வேண்டும். துணிகளால் ஆன கட்சிக் கொடிகளை சின்னங்கள் இட்ட பதாகைகளைப் பயன்படுத்தலாம். பூமாலை, பொன்னாடைக்கு பதிலாக பூங்கொத்து, புத்தகங்கள் கொடுத்து வரவேற்கலாம். புத்தகம் என்பது அப்பியாசக் கொப்பிகளாகவும் இருக்கலாம். அதனைப் பெற்றுக் கொள்ளும் அமைப்பு அந்தப் பிரதேச வறிய மாணவர்களுக்கு பகரந்தளிக்கலாம். கவுத ரஜா . ம்மய் ரஜா போன்ற அர்த்தமற்ற கோஷங்களை அரங்கம் தவிர்க்க வேண்டும். இங்கே யாருமே ராஜா வாக வரவில்லை. மக்களுக்கு சேவையாற்றவே வந்துள்ளோம். எனவே அதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார். "மலையக அரசியல் அரங்கம்  மாற்றத்திற்கான தெரிவு" "தளராது எங்கள் எண்ணம் தராசு எங்கள் சின்னம்" ஆகிய கோஷங்களை தேர்தல் பிரச்சாரங்களின்போது பயன்படுத்துவது, சுழற்சி முறையில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சபைகளில் அங்கம் வகிக்கும் வாய்ப்பினை வழங்குவது, வேட்பாளர்களின் சொத்து பொறுப்புக்களை தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கி அதன் பிரதிகளை சாட்சி கருதி M12M அமைப்புக்கு வழங்குவது போன்ற தீர்மானங்களும் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. ஊடகங்களுக்கு எவ்வாறு பேசுவது எனும் பயிற்சிகளும் துறை சார்ந்த வர்களைக் கொண்டு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement