வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

வலைத்தளமான WhatsApp ஐ Meta நிறுவனம் வாங்கிய பின்னர், அதில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு Updateகளை வழங்கி வரும் அந்நிறுவனம் தற்போது பயனர்கள் ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்த ஒரு சிறப்பம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

அது என்னவென்றால், WhatsAppஇல் நீங்கள் பதிவிடும் Status, Profile Photo, Last Seen ஆகியவற்றின் Privacy Optionஇல் My contacts except என்கிற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை உங்கள் WhatsApp Accountஇன் Profile Photo, Last Seen மற்றும் நீங்கள் பதிவிடும் Status ஆகியவற்றை அனைவரும் பார்க்க முடியும், Contactஇல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும், யாரும் பார்க்கக்கூடாது என்கிற 3 Optionகள் மட்டுமே காணப்பட்டது.

ஆனால் தற்போது சேர்க்கப்பட்டுள்ள My contacts except என்கிற வசதியின் மூலம் உங்கள் Contact இல் இருப்பவர்களில் யாருக்கெல்லாம் உங்களது Status, Profile Photo, Last Seen ஆகியவை காட்டப்பட வேண்டும் என்பதை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.

விரைவில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை