• Mar 29 2024

டக்ளஸின் அடியாட்கள்: வசந்த முதலிகே வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! samugammedia

Tamil nila / Mar 28th 2023, 6:58 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளை ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மறுத்துள்ளார். 


டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  அங்கத்தவர்களே பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் வசந்த முதலிகே மேலும் தெரிவிக்கையில்,  


போதையில் இருந்த சுமார் 25 பேர் கொண்ட குழு எங்களிடம் வந்து ‘அறகலய’ வேண்டாம் என்று கூறியது. வடக்கு மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பலாம் என்று சொன்னார்கள். 


தெற்கில் உள்ளவர்களைப் போன்றே வடக்கிலுள்ள தாய் தந்தையர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களது பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர், சிலர் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களுக்கு இன்னும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது.


அரசாங்கம் டக்ளஸ் தேவானந்தாவின் அடியாட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி பிரச்சினைகளை கம்பளத்தின் கீழ் மறைக்க முற்பட்டால் அதை செய்ய முடியாது எனவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.


டக்ளஸின் அடியாட்கள்: வசந்த முதலிகே வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் samugammedia யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளை ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மறுத்துள்ளார். டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  அங்கத்தவர்களே பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் வசந்த முதலிகே மேலும் தெரிவிக்கையில்,  போதையில் இருந்த சுமார் 25 பேர் கொண்ட குழு எங்களிடம் வந்து ‘அறகலய’ வேண்டாம் என்று கூறியது. வடக்கு மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பலாம் என்று சொன்னார்கள். தெற்கில் உள்ளவர்களைப் போன்றே வடக்கிலுள்ள தாய் தந்தையர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களது பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர், சிலர் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களுக்கு இன்னும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது.அரசாங்கம் டக்ளஸ் தேவானந்தாவின் அடியாட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி பிரச்சினைகளை கம்பளத்தின் கீழ் மறைக்க முற்பட்டால் அதை செய்ய முடியாது எனவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement