• Mar 29 2024

தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சிகள் தீவிரம் - சபையில் பகிரங்கப்படுத்திய அநுர!

Sharmi / Dec 2nd 2022, 7:28 pm
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான சதிச்சூழ்நிலைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

சட்டத்தின்படி, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் 2023 மார்ச் 20ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும். இதற்கான அனைத்து உரிமைகளும் அந்த ஆணைக்குழுவுக்கு உள்ளது. எனினும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை கோரியிருக்கிறார்.

இது, ஏற்புடையதல்ல. தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்து அதிகாரங்கள் இருந்தும்கூட, ஆணையாளரின் செயற்பாடு,சந்தேகத்துக்குரியதாக அமைந்துள்ளது.

எனவே அவரை சுயாதீனமான செயற்படும் ஒரு ஆணையாளராக கருதமுடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிக்கடி நாடாளுமன்றுக்கு ஓடி வந்த பதில்களைக் கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பிலும் பதிலை வழங்கவேண்டும் என்று அநுர குமார கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சிகள் தீவிரம் - சபையில் பகிரங்கப்படுத்திய அநுர உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான சதிச்சூழ்நிலைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்சட்டத்தின்படி, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் 2023 மார்ச் 20ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும். இதற்கான அனைத்து உரிமைகளும் அந்த ஆணைக்குழுவுக்கு உள்ளது. எனினும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை கோரியிருக்கிறார்.இது, ஏற்புடையதல்ல. தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்து அதிகாரங்கள் இருந்தும்கூட, ஆணையாளரின் செயற்பாடு,சந்தேகத்துக்குரியதாக அமைந்துள்ளது.எனவே அவரை சுயாதீனமான செயற்படும் ஒரு ஆணையாளராக கருதமுடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.அடிக்கடி நாடாளுமன்றுக்கு ஓடி வந்த பதில்களைக் கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பிலும் பதிலை வழங்கவேண்டும் என்று அநுர குமார கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement