இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் இலங்கைக்கு முட்டை!

முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது முட்டை ஒன்றின் விற்பனை விலை இலங்கை நாணயப் பெறுமதியில் 18 ரூபாவாக உள்ளது.

மேலும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்து இந்த நாட்டில் ஒரு முட்டையை 20 ரூபாய்க்கு வழங்குவது மிகவும் எளிதானது என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு முட்டையின் விலை 58- 65 ரூபா வரை விற்கப்படுகின்றது, எனினும் நியாயமாக விலையில் விற்காமல் விற்பனையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆளுக்கு ஒரு விலையில் விற்கின்றனர்.

எனவே முட்டையை இறக்குமதி செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை