• Sep 30 2024

எகிப்தின் பணவீக்கம் உச்சம்- சூடு பிடித்த பொருட்களின் விலையால் பரிதவிக்கும் மக்கள்! SamugamMedia

Tamil nila / Mar 9th 2023, 6:41 pm
image

Advertisement

எகிப்தில் பணவீக்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.


எகிப்தில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  அந்நாட்டின்  பொருளாதாரம்  நெருக்கடியிலுள்ளது.


கடந்த ஜனவரியில் ஆண்டிற்கான பணவீக்கம் 26.5 சதவிகிதம் என இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் அது 32.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.


அதனால் தானியங்கள், இறைச்சி, மீன் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக  உயர்ந்துள்ளது. 



கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலை 61.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 


எகிப்தில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கான  வறுமையில் வாடுவதால்  அவர்கள் தொடர்ந்தும்  அதிகரித்து வரும் விலைவாசியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


 எகிப்து அதிகமாக கோதுமையை இறக்குமதி செய்யும் நாடாகும். எகிப்து தனக்குத் தேவையான கோதுமையினை அதிக அளவில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது. 


தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர அண்மையில் சர்வதேச நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாகப் (கடனாகப்) பெற்றது. 

இந்த உதவிக்கு பதிலாக எகிப்து சர்வதேச நிதியத்தின் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த  ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவருகின்றது. 


எகிப்தின் நாணயமானது  தற்போது 50 சதவிகிதம் அதன் மதிப்பை இழந்துள்ளது. இதனால்,  எகிப்து அரசு முன்னர் எரிபொருட்களின் விலையினை உயர்த்தியது. 


அதன்விளைவாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி அதிகரித்தது. இந்த நிலையை சரிசெய்ய அரசு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய சந்தைகளை உருவாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எகிப்தின் பணவீக்கம் உச்சம்- சூடு பிடித்த பொருட்களின் விலையால் பரிதவிக்கும் மக்கள் SamugamMedia எகிப்தில் பணவீக்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.எகிப்தில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  அந்நாட்டின்  பொருளாதாரம்  நெருக்கடியிலுள்ளது.கடந்த ஜனவரியில் ஆண்டிற்கான பணவீக்கம் 26.5 சதவிகிதம் என இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் அது 32.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.அதனால் தானியங்கள், இறைச்சி, மீன் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக  உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலை 61.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எகிப்தில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கான  வறுமையில் வாடுவதால்  அவர்கள் தொடர்ந்தும்  அதிகரித்து வரும் விலைவாசியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எகிப்து அதிகமாக கோதுமையை இறக்குமதி செய்யும் நாடாகும். எகிப்து தனக்குத் தேவையான கோதுமையினை அதிக அளவில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது. தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர அண்மையில் சர்வதேச நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாகப் (கடனாகப்) பெற்றது. இந்த உதவிக்கு பதிலாக எகிப்து சர்வதேச நிதியத்தின் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த  ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவருகின்றது. எகிப்தின் நாணயமானது  தற்போது 50 சதவிகிதம் அதன் மதிப்பை இழந்துள்ளது. இதனால்,  எகிப்து அரசு முன்னர் எரிபொருட்களின் விலையினை உயர்த்தியது. அதன்விளைவாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி அதிகரித்தது. இந்த நிலையை சரிசெய்ய அரசு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய சந்தைகளை உருவாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement