வாகன விபத்தில் வயோதிபத் தம்பதியினர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.
ஓட்டோவுடன் லொறி மோதியதில் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியினர் ஓட்டோவில் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்தில் 77 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், 75 வயதுடைய மனைவி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பயணித்த ஓட்டோவின் சாரதியான 26 வயதுடைய இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஓட்டோவுடன் மோதிய லொறியின் சாரதியான 35 வயதுடைய குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டோவுடன் லொறி மோதி விபத்து - வயோதிபத் தம்பதி பரிதாபமாக உயிரிழப்பு samugammedia வாகன விபத்தில் வயோதிபத் தம்பதியினர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.ஓட்டோவுடன் லொறி மோதியதில் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்துச் சம்பவம் அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது.குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியினர் ஓட்டோவில் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை விபத்தில் சிக்கியுள்ளனர்.விபத்தில் 77 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், 75 வயதுடைய மனைவி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் பயணித்த ஓட்டோவின் சாரதியான 26 வயதுடைய இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஓட்டோவுடன் மோதிய லொறியின் சாரதியான 35 வயதுடைய குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.