இன்று பிற்பகல் மதவாச்சியில் இருந்து மன்னார் சென்ற புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டமையால் பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் மதவாச்சி பகுதியில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த குறித்த புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டமையால் வவுனியா ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் பழுதடைந்து நின்றது.
நீண்ட நேரமாகியும் புகையிரத கோளாறு சீர்செய்யப்படாமையினால் அதில் பயணித்த பொதுமக்கள் பேருந்துகளில் ஏறி தமது பயணத்தினை தொடர்ந்திருந்தனர்.