இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 6 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள இங்கிலாந்து வீரர்

317

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 23 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று முன்தினம் (12) அறிவிக்கப்பட்டது.

கடைசியாக 2015 இல் இங்கிலாந்து அணிக்காக டி20 இல் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்குத் திரும்பியுள்ளார்.

கடைசியாக 2019 இல் இங்கிலாந்து அணிக்காக டி20 ஆட்டத்தில் விளையாடிய டேவிட் வில்லியும் இலங்கை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்களைத் தவிர்த்து கடைசியாக 201 -இல் விளையாடிய லியாம் டாசனும் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார்.

காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ரீஸ் டாப்லே ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்து அணி விபரம் பின்வருமாறு,

இயான் மார்கன் (கெப்டன்)

மொயீன் அலி

ஜானி பேர்ஸ்டோவ்

சாம் பில்லிங்ஸ்

ஜோஸ் பட்லர்

சாம் கரன்

டாம் கரன்

லியாம் டாஸன்

கிறிஸ் ஜோர்டன்

லியாம் லிவிங்ஸ்டன்

டேவிட் மலான்

அடில் ரஷித்

ஜேசன் ராய்

டேவிட் வில்லி

கிறிஸ் வோக்ஸ்

மார்க் வுட்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: