• Apr 19 2024

எதிர்க்கட்சிகளுடன் முக்கிய நாடுகளின் தூதுவர்கள் திடீர் சந்திப்பு!SamugamMedia

Sharmi / Mar 23rd 2023, 9:22 pm
image

Advertisement

12 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று (22) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த விடயங்களைத் தெளிவுபடுத்தும் பிரதான நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறிப்பாக, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டல், அரசமைப்பைப் பாதுகாத்துக்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு வெளிநாட்டுத் தூதுவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ்,  நியூசிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


எதிர்க்கட்சிகளுடன் முக்கிய நாடுகளின் தூதுவர்கள் திடீர் சந்திப்புSamugamMedia 12 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று (22) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த விடயங்களைத் தெளிவுபடுத்தும் பிரதான நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.குறிப்பாக, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டல், அரசமைப்பைப் பாதுகாத்துக்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு வெளிநாட்டுத் தூதுவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.இந்தச் சந்திப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ்,  நியூசிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement