சித்ராவின் செல்போனில் சிக்கிய மற்றொரு திடுக்கிடும் ஆதாரம்!

22371

சின்னத்திரை நடிகை சித்திராவின் மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் அவரது சாவு ஒரு தற்கொலை என மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது கைபேசியைக் கைப்பற்றி ஆய்வு செய்துவரும் பொலிஸார் நாளுக்கு நாள் திடுக்கிடும் பல தகவல்களை வெளியிட்டுவருகின்றனர்.

அவரது கைபேசியிலுள்ள வாட்ஸ் அப் தகவல்கள் பல அழிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை தற்கொலைக்கு முன்னதாக கடைசியாக தனது தாயாருடன் சித்ரா செல்போனில் பேசியமை பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

தொலைபேசித் தொலைத்தொடர்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றுவரும் இந்த ஆய்வில் சித்திராவின் தாய் கடுமையான குரலில் பேசியிருப்பது வெளிவந்திருக்கிறது. தாயாரான விஜயா, ஹேமந்தை விட்டு பிரிந்து வந்துவிடும் படி கடுமையான குரலில் அழுத்தமாக கூறியிருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே ஹேமந்தும் சித்ராவின் நடிப்பு வாழ்க்கை தொடர்பில் கடும் அழுத்தங்களைக் கொடுத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் சித்ராவின் தற்கொலைக்குரிய உளவியல் தாக்குதலை தெரிந்தோ தெரியாமலோ அவரது கணவரும் தாயும் மேற்கொண்டிருப்பது நிரூபணமாகிவருவதால் சித்ராவின் தற்கொலைக்கான முழுப் பொறுப்பும் அவர்கள் இருவரையுமே சாரும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கூறிவருகின்றனர்.

இதேவேளை இன்றைய ஆர்.டி.ஓ விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் தாய் விஜயா, ”எனக்கும் எனது மகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவருடன் சண்டையிடவில்லை. எனது மகள் இறப்பதற்கு முன்னர் என்னிடம் போனில் பேசினார். சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம். ஆர்.டி.ஓ. விசாரணையில் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளோம். எந்தவொரு தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக இருக்க மாட்டார்” என்று கதறி அழுதபடியே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.