• Mar 29 2024

நெருக்கமாக இருந்த நடிகைக்கு பணம் வழங்கிய குற்றசாட்டு- முக்கிய நாட்டின் முன்னாள் அதிபர் சரணடைய திட்டம்!SamugamMedia

Tamil nila / Mar 19th 2023, 7:32 pm
image

Advertisement

பிரசாரநிதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நடிகைக்கு பணம்  வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் பட்சத்தில்  குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்றும்  அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். 


அமெரிக்காவின்  முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், வருகின்ற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்  தன்னுடன் டிரம்ப் நெருங்கிய உறவில் இருந்தார் என்று தெரிவித்திருந்தார். 


அதனை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். தேர்தலின்போது இந்த தகவல் வெளியானதால் அதுபற்றி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருப்பதற்காக  1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. 


இந்நிலையில் நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் வரும்  21 ஆம் திகதி கைது செய்யப்படவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 


மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கொள் காட்டி டிரம்ப், தனது ட்ருத் சமூக வலைதளத்தில் , முன்னணி குடியரசு கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் வரும் 21 ஆம் திகதி  (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்படுவார் ,  கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார்  என்றும்  அதனால் போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

நெருக்கமாக இருந்த நடிகைக்கு பணம் வழங்கிய குற்றசாட்டு- முக்கிய நாட்டின் முன்னாள் அதிபர் சரணடைய திட்டம்SamugamMedia பிரசாரநிதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நடிகைக்கு பணம்  வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் பட்சத்தில்  குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்றும்  அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்  முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், வருகின்ற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்  தன்னுடன் டிரம்ப் நெருங்கிய உறவில் இருந்தார் என்று தெரிவித்திருந்தார். அதனை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். தேர்தலின்போது இந்த தகவல் வெளியானதால் அதுபற்றி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருப்பதற்காக  1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் வரும்  21 ஆம் திகதி கைது செய்யப்படவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கொள் காட்டி டிரம்ப், தனது ட்ருத் சமூக வலைதளத்தில் , முன்னணி குடியரசு கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் வரும் 21 ஆம் திகதி  (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்படுவார் ,  கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார்  என்றும்  அதனால் போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement