• Sep 30 2024

தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் - குற்றச்சாட்டை மறுத்தார் - நீதியமைச்சர்.! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 4:36 pm
image

Advertisement

இலங்கை கடற்பரப்பிற்குள் தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இழப்பீட்டு அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்  அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார். 

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இழப்பீட்டு நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் 

இந்த நடவடிக்கைகள் மந்தகதியில் நடைபெறுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை தாம் நிராகரிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடுவதற்காக 40 நிபுணர்கள் குழு தயாரித்த அறிக்கை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும், 

ஆனால் அந்த அறிக்கை இந்த ஆண்டு ஜனவரி மாதமே தமக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் - குற்றச்சாட்டை மறுத்தார் - நீதியமைச்சர். samugammedia இலங்கை கடற்பரப்பிற்குள் தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இழப்பீட்டு அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்  அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.குறிப்பாக எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இழப்பீட்டு நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த நடவடிக்கைகள் மந்தகதியில் நடைபெறுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை தாம் நிராகரிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடுவதற்காக 40 நிபுணர்கள் குழு தயாரித்த அறிக்கை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அறிக்கை இந்த ஆண்டு ஜனவரி மாதமே தமக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement