• Apr 24 2024

இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் கடும் வெப்பம் - 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 20th 2023, 10:14 am
image

Advertisement


நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பம் இன்றும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் கடும் வெப்பம் - 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பம் இன்றும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்தப் பகுதிகளில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement