• Jul 16 2024

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் வசதிகள் குறைவாகவே உள்ளது- கண்டுபிடித்த மைத்திரி!SamugamMedia

Sharmi / Mar 15th 2023, 9:56 am
image

Advertisement

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் வசதிகள் குறைவாகவே காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐ.என்.ஏ. மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தின் 3ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்திருந்தார்.

கல்வி மேம்பாட்டுக்கு தனியார் துறையின் பங்களிப்பு அவசியமாகும். அதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறைக்கு பூரண சிறப்புரிமைகள் இருக்க வேண்டும். கல்வி துறையில் அரச கல்வி நிறுவனங்கள் மாத்திரமே செயற்பட வேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். எனினும் அந்த கருத்துக்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன்.

தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டாயம் செயற்பட வேண்டும். மருத்துவ துறைசார் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்படும் வசதிகள் போன்று வசதிகளுடன் கூடிய அரச மருத்துவ கல்வி நிறுவனங்கள் நாட்டில் இல்லாதமையிட்டு நான் கவலை அடைகிறேன்.

எனவே, நாடு எவ்வாறான பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

ஐ.என்.ஏ. மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கல்வி நிறுவனத்தில் தமிழ்,முஸ்லிம் மாணவர்களே கல்வி பயில்கின்றனர்.
இலங்கையின் தென் மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் வசதிகள் குறைவாகும். அந்த குறையை ஈடுசெய்ய இவ்வாறான கல்வி நிறுவனங்கள் அவசியமாகும்.

அத்துடன், இன்றைய நாட்டின் நெருக்கடிமிக்க சூழல் காரணமாக துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லுகின்றனர். இது கவலைக்குரிய விடயம் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் வசதிகள் குறைவாகவே உள்ளது- கண்டுபிடித்த மைத்திரிSamugamMedia வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் வசதிகள் குறைவாகவே காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஐ.என்.ஏ. மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தின் 3ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்திருந்தார்.கல்வி மேம்பாட்டுக்கு தனியார் துறையின் பங்களிப்பு அவசியமாகும். அதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறைக்கு பூரண சிறப்புரிமைகள் இருக்க வேண்டும். கல்வி துறையில் அரச கல்வி நிறுவனங்கள் மாத்திரமே செயற்பட வேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். எனினும் அந்த கருத்துக்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டாயம் செயற்பட வேண்டும். மருத்துவ துறைசார் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்படும் வசதிகள் போன்று வசதிகளுடன் கூடிய அரச மருத்துவ கல்வி நிறுவனங்கள் நாட்டில் இல்லாதமையிட்டு நான் கவலை அடைகிறேன்.எனவே, நாடு எவ்வாறான பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். ஐ.என்.ஏ. மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கல்வி நிறுவனத்தில் தமிழ்,முஸ்லிம் மாணவர்களே கல்வி பயில்கின்றனர். இலங்கையின் தென் மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் வசதிகள் குறைவாகும். அந்த குறையை ஈடுசெய்ய இவ்வாறான கல்வி நிறுவனங்கள் அவசியமாகும்.அத்துடன், இன்றைய நாட்டின் நெருக்கடிமிக்க சூழல் காரணமாக துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லுகின்றனர். இது கவலைக்குரிய விடயம் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement