• Mar 28 2024

அவுஸ்திரேலியாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை தருவதாக கூறி ஏமாற்றிய போலி வைத்தியர்! samugammedi

Chithra / Apr 6th 2023, 9:11 am
image

Advertisement

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த நபரை பொரளை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட மேலும் இருவர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாக கூறி வைத்தியர் போல் நடித்து 70,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக மருதானையை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அவ்வாறே குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 50,000 ரூபா பணம் கேட்டுள்ளனர்.

சந்தேகநபர் தனக்கு இரண்டு ஆப்பிள் தோட்டங்கள் இருப்பதாகவும், இருவருக்கு அங்கு தொழில் செய்ய வாய்ப்பு தருவதாக கூறி இந்த இருவரிடமும் மோசடியாக பணம் பெற்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நேற்று (05) கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தாம் போலி வைத்தியர் என ஒப்புக்கொண்டார்.

மேலும் முறைப்பாட்டாளர்களிடம் தீர்வு காண விருப்பம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை தருவதாக கூறி ஏமாற்றிய போலி வைத்தியர் samugammedi கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த நபரை பொரளை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.இந்த சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட மேலும் இருவர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாக கூறி வைத்தியர் போல் நடித்து 70,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக மருதானையை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.அவ்வாறே குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 50,000 ரூபா பணம் கேட்டுள்ளனர்.சந்தேகநபர் தனக்கு இரண்டு ஆப்பிள் தோட்டங்கள் இருப்பதாகவும், இருவருக்கு அங்கு தொழில் செய்ய வாய்ப்பு தருவதாக கூறி இந்த இருவரிடமும் மோசடியாக பணம் பெற்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் நேற்று (05) கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தாம் போலி வைத்தியர் என ஒப்புக்கொண்டார்.மேலும் முறைப்பாட்டாளர்களிடம் தீர்வு காண விருப்பம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இந்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement