இலவசமாக 100 ஸ்மார்ட் போன்களை வழங்கிய பிரபல நடிகர்!

246

ஹிந்தி சினிமாவில் நடிகர் சோனு சூர் அண்மைகாலமாக மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால் அவரை மக்கள் ரியல் ஹீரோவாக பார்க்கின்றனர்.

இதற்கமைவாக கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வந்ததோடு, அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்.

மேலும் வெளிநாட்டில் சிக்கி தவித்த மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்தார்.

அந்நிலையில் மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்காக 100 பேருக்கு ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்கியுள்ளாராம்.