மீண்டும் கமலுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

163

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் கடந்த 2013 ஆண்டு வெளியாகி வசூல் குவித்த திரைப்படம் திரிஷ்யம்.

இத் திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது.

இதில் கமல்ஹாசன், கௌதமி கலாபவன் மணி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2 ஆம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அந்தவகையில் இத் திரைப்படமும் தமிழில் ‘பாபநாசம் 2 ஆம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசனும், நடிகை மீனாவும் ஏற்கனவே கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: