நடிகை ஊர்வசி ரவுத்தேலா, யாக் எனும் பனி பிரதேசங்களில் வாழும் எருமையின் மீது ஏறி கொடுத்துள்ள போஸ் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நாயகியான ஊர்வசி ரவுத்தேலா முதன் முறையாக
ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் லெஜண்ட் சரவணா என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள வித்தியாசமான போட்டோக்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட் படங்களை தாண்டி தென்னிந்திய மொழிகளான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஊர்வசி ரவுத்தேலா லெஜண்ட் சரவணா படம் மூலமாக தமிழில் முதன் முறையாக அறிமுகமாகவுள்ளார்.

லெஜண்ட் சரவணாவுடன் தற்போது ரொமான்ஸ் பண்ணும் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்நியன் விக்ரம் போல யாக் எனும் பனி பிரதேசங்களில் வசிக்கும் எருமை மீது ஏறி ஊர்வசி ரவுத்தேலா கொடுத்துள்ள போஸ் வைரலாகியுள்ளது.

உடல் முழுக்க மறைத்தபடி ஜெர்கினை அணிந்து கொண்டு யாக் மீது அமர்ந்திருக்கும் போட்டோக்களை போட்டு லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: