பிரதமரை கம்புகளால் விரட்டும் விவசாயிகள்! வைரலாகும் காணொலி

272

ரம்பேவ பகுதியில் நேற்று விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போதுஇ விவசாயிகள் அரசாங்கத்தின் மீதுள்ள கோபத்தை வெளிக்காட்ட ஒரு புதிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் முகமூடி அணிந்த ஒருவர் ஆடம்பர காரில் போராட்ட இடத்திற்கு வந்து இறங்குவதாகவும்இ விவசாயிகள் கம்புகள் மற்றும் தென்னை மட்டைகளுடன் விரட்டிச் சென்று பிரதமரை தாக்கும் வகையிலும் ஒரு சம்பவத்தை செய்து காட்டியுள்ளனர்.

இச் சம்பவம் அடங்கிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அத்துடன்இ விவசாய அமைச்சரின் முகமூடி அணிந்த ஒரு பொம்மைக்கு தீ வைத்தும் விவசாயிகள் தமது கோபத்தை வெளிகாடியுள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகள் அரசாங்கத்தின் மீது விவசாயிகள் கொண்டுள்ள அதீத கோபத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.