இலங்கை கிரிக்கெட் ஒப்பந்த கைச்சாத்தின் போது கடுமையான வாக்குவாதம்

149

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் வருடாந்த ஒப்பந்தத்தில் இன்றைய தினம் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள், கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் மேற்கொள்ளப்பட்டன.

இம்முறை கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு முன்னதாக, புள்ளி வழங்கல் முறைமைக்கு அமைய தரப்படுத்தலொன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த தரப்படுத்தலுக்காக பயன்படுத்திய புள்ளிவழங்கல் முறைமையின் வெளிப்படைத்தன்மை தொடர்பில், கேள்வியெழுப்பிய கிரிக்கெட் வீரர்கள், இந்த முறைமையை பகிரங்கப்படுத்துமாறு கோரியிருந்தனர்.

எனினும், இந்த குழப்பநிலைக்கு மத்தியில் இன்று போட்டி ஒப்பந்தத்துக்கான கையெழுத்தைப் பெற தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது, கிரிக்கெட் வீரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் உப தலைவர் ஜயந்த தர்மதாஸ இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டனர்.

அதன்போது, குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் அணியின் வீரர்கள், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் தாம் தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேற தீர்மானித்தனர்.

எனினும், அதன்பின்னர் கிரிக்கெட் வீரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3 ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளுக்காக நாளை அதிகாலை இலங்கை கிரிக்கெட் அணி இலங்கையிலிருந்து இங்கிலாந்து பயணமாகவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: