50 சதவீதமான மாணவர்கள் போதைக்கு அடிமை-ஆய்வில் அதிர்ச்சி

209

இரத்தினபுரி மாவட்ட கல்வி நிலையங்களில், கல்வி கற்கும் மாணவர்களில் 50 சதவீதமானவர்கள், போதைக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதென, இரத்தினபுரி மாவட்டத்தின் புத்திஜீவிகள் அமைப்பின் செயலாளர் கே. தியாகேஸ்வரன் தெரிவித்தார்.

எனவே, பிள்ளைகளுக்கு சமயக் கல்விக்கும் முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் அப்போதே அவர்களை போதைப் பொருளிலிருந்து மீட்டெடுக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மேலதிக வகுப்புக்களுக்காகச் செல்லும் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகும் சூழ்நிலை
அதிகமாக உள்ளதால் இவ்விடயத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் அதிக கவனம் செலுத்த
வேண்டும் என்றார்.

ஞாயிற்றுக் கிழமைகளில், அறநெறி வகுப்புக்களுக்கு மாணவர்களை தவறாது அனுப்பி வைத்தல் வேண்டும் என்றும், இத் தினங்களில் மாணவர்களை வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: