• Apr 16 2024

இலங்கை அணிக்கு எதிராக வாண வேடிக்கை!! .

Tamil nila / Jan 7th 2023, 9:40 pm
image

Advertisement

இலங்கை அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் வாண வேடிக்கைகள் காட்டிய சூர்ய குமார் யாதவ், 20 ஓவர் போட்டியில் 3வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். 


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தாலும், அடுத்த வந்த பிளேயர்கள் அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர் முடிவில் 228 ரன்களை குவித்தது. மைதானத்தில் வாண வேடிக்கைகள் காட்டிய சூர்ய குமார் யாதவ், 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார்.


இந்திய அணி பேட்டிங்


இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் களமிறங்கினர். கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் அவுட்டான இஷான் கிஷன் இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார். 1 ரன்னுக்கு அவர் விக்கெட் கொடுத்து வெளியேற அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடி காட்டினார். சுப்மான் கில் ஒருபுறம் நிதானமான ஆடிக் கொண்டிருந்தார். 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ராகுல் திரிபாதி விக்கெட் பறிகொடுத்த நிலையில், சுப்மான் கில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


சூர்யகுமார் யாதவ் வாண வேடிக்கை


ஆனால், ஒருமுனையில் விக்கெட் விழுவதையெல்லாம் சூர்யகுமார் யாதவ் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம்போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை விளையாடிய அவர், மைதானம் முழுவதும் வாண வேடிக்கைகளை காட்டிக் கொண்டிருந்தார். 51 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ், 112 ரன்கள் விளாசினார். இதில் 9 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். சூர்யகுமார் 20 ஓவர் போட்டியில் அடித்த 3வது சர்வதேச சதமாகும் இது பதிவானது.



கடைசி கட்டத்தில் களமிறங்கிய அக்சர் படேல் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடினார். 9 பந்துகள் விளையாடிய அக்சர், 21 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியிலும் தன்னுடைய பேட்டிங் திறமையை காண்பித்தால் இந்திய அணி நிர்வாகம் மகிழ்ச்சியில் உள்ளது. ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக குறைந்த பந்தில் சதமடித்த 2வது வீரர் என்ற சாதனை சூர்யகுமார் வசம் உள்ளது. 


இலங்கை அணிக்கு எதிராக வாண வேடிக்கை . இலங்கை அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் வாண வேடிக்கைகள் காட்டிய சூர்ய குமார் யாதவ், 20 ஓவர் போட்டியில் 3வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தாலும், அடுத்த வந்த பிளேயர்கள் அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர் முடிவில் 228 ரன்களை குவித்தது. மைதானத்தில் வாண வேடிக்கைகள் காட்டிய சூர்ய குமார் யாதவ், 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார்.இந்திய அணி பேட்டிங்இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் களமிறங்கினர். கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் அவுட்டான இஷான் கிஷன் இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார். 1 ரன்னுக்கு அவர் விக்கெட் கொடுத்து வெளியேற அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடி காட்டினார். சுப்மான் கில் ஒருபுறம் நிதானமான ஆடிக் கொண்டிருந்தார். 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ராகுல் திரிபாதி விக்கெட் பறிகொடுத்த நிலையில், சுப்மான் கில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.சூர்யகுமார் யாதவ் வாண வேடிக்கைஆனால், ஒருமுனையில் விக்கெட் விழுவதையெல்லாம் சூர்யகுமார் யாதவ் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம்போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை விளையாடிய அவர், மைதானம் முழுவதும் வாண வேடிக்கைகளை காட்டிக் கொண்டிருந்தார். 51 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ், 112 ரன்கள் விளாசினார். இதில் 9 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். சூர்யகுமார் 20 ஓவர் போட்டியில் அடித்த 3வது சர்வதேச சதமாகும் இது பதிவானது.கடைசி கட்டத்தில் களமிறங்கிய அக்சர் படேல் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடினார். 9 பந்துகள் விளையாடிய அக்சர், 21 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியிலும் தன்னுடைய பேட்டிங் திறமையை காண்பித்தால் இந்திய அணி நிர்வாகம் மகிழ்ச்சியில் உள்ளது. ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக குறைந்த பந்தில் சதமடித்த 2வது வீரர் என்ற சாதனை சூர்யகுமார் வசம் உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement