
ஜனாதிபதியின்
பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து
588 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின்
ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா
சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் பிரதான சிறைச்சாலை
சிறைக்காவலர் சந்திரசிறி மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின்
பங்குபற்றுதலுடன் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து ஒரு பெண்
கைதி உட்பட ஐவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.





