இரண்டு நாட்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- காஷ்மீரில் சம்பவம்

104

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவத்தினர் வீர மரணமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரு நாட்களில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.