• Apr 20 2024

தனது விருதை கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்ற கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோ! இதுதான் காரணம்!

Chithra / Jan 12th 2023, 8:30 am
image

Advertisement

போர்த்துக்கலைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஐந்து பாலன் டி ஓர்களில் ஒன்றை இஸ்ரேலின் பெரும் பணக்கார் ஒருவருக்கு விற்றுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008, 2013, 2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் பாலன் டி'ஓர் (Ballon d'Or) கோப்பைகளை வென்றுள்ளார்.

இதற்கமைய தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் 5 பாலன் டி'ஓர் (Ballon d'Or) கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால், அதில் 4 விருதுகள் மட்டுமே இப்போது அவரிடம் உள்ளது.

ஏனெனில் 2017-ல் தனது பலோன் டி'ஓர் கோப்பைகளில் ஒன்றை அவர் விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக, Ballon d'Or விருதை வென்றவர்கள், அதனை அவர்கள் விளையாடி வென்ற கிளப்பில் ஒப்படைப்பார்கள். அல்லது மாற்றாக, அதனை அவர்களின் சொந்த கோப்பை சேகரிப்பிலோ அருங்காட்சியகத்திலோ வைப்பார்கள்.


ஆனால் ரொனால்டோ 2013 வென்ற Ballon d'Or கோப்பையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த Ballon d'Or கோப்பை லண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது.

இதனை இஸ்ரேலின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ஐடான் ஓபர் ஏலத்தை வென்று 600,000 யூரோக்களுக்கு கோப்பையை வாங்கிக்கொண்டுள்ளார்.

ரொனால்டோ கடைசியாக 2017-ல் பாலன் டி'ஓர் விருதை வென்றார்.

ஆர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்சி 7 பாலன் டி'ஓர் விருதை இதுவரை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தனது விருதை கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்ற கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோ இதுதான் காரணம் போர்த்துக்கலைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஐந்து பாலன் டி ஓர்களில் ஒன்றை இஸ்ரேலின் பெரும் பணக்கார் ஒருவருக்கு விற்றுள்ளார்.கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008, 2013, 2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் பாலன் டி'ஓர் (Ballon d'Or) கோப்பைகளை வென்றுள்ளார்.இதற்கமைய தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் 5 பாலன் டி'ஓர் (Ballon d'Or) கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால், அதில் 4 விருதுகள் மட்டுமே இப்போது அவரிடம் உள்ளது.ஏனெனில் 2017-ல் தனது பலோன் டி'ஓர் கோப்பைகளில் ஒன்றை அவர் விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுவாக, Ballon d'Or விருதை வென்றவர்கள், அதனை அவர்கள் விளையாடி வென்ற கிளப்பில் ஒப்படைப்பார்கள். அல்லது மாற்றாக, அதனை அவர்களின் சொந்த கோப்பை சேகரிப்பிலோ அருங்காட்சியகத்திலோ வைப்பார்கள்.ஆனால் ரொனால்டோ 2013 வென்ற Ballon d'Or கோப்பையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த Ballon d'Or கோப்பை லண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது.இதனை இஸ்ரேலின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ஐடான் ஓபர் ஏலத்தை வென்று 600,000 யூரோக்களுக்கு கோப்பையை வாங்கிக்கொண்டுள்ளார்.ரொனால்டோ கடைசியாக 2017-ல் பாலன் டி'ஓர் விருதை வென்றார்.ஆர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்சி 7 பாலன் டி'ஓர் விருதை இதுவரை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Advertisement

Advertisement

Advertisement