• Apr 25 2024

தமிழர்களின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடு அவசியம் - மறவன்புலவு சச்சிதானந்தம் சுட்டிக்காட்டு!

Chithra / Feb 1st 2023, 10:11 am
image

Advertisement

தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அந்நிய முதலீடுகள் அத்தியாவசியமானதென இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சதச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் விஜிபி குழுமத்தினுடைய நிறுவுநரும் அதனுடைய பிரதம நிர்வாகியுமான சந்தோசமும் அவருடைய குழுவினரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இதில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசத்தின் முதுகெலும்பு பொருளாதாரம், முதல் நிலை உற்பத்தி, வேளான் உற்பத்தி, கடற்தொழில் உற்பத்தி மற்றும் தொழில்கள் வளர்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தொழில் வளர்ச்சி மட்டுமல்ல வணிகமானது கொள்வனவு, விற்பனை, இலாபம் வங்கிக்கடன்  மற்றும்  பொருளாதார வளர்ச்சி போன்றவற்றையும் உள்ளடக்குவதாக குறிப்பிட்டார்.

தமிழ்த் தேச பொருளாதாரம் வளர்ச்சியடைய அந்நிய முதலீடு அத்தியாவசியமானதாகும் என்றும் அதனை உணர்ந்து தன்னால் முடிந்தளவு அந்நிய முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக மறவன்புலவு சதச்சிதானந்தம் குறிப்பிட்டுள்ளார்.

வி.ஜி சந்தோசம் இந்தியாவின் முன்னணி வணிகக் குழுமம் என்றும் அவர்கள் இங்கு முதலிடுவார்களானால் அரசும் வணிகர்களும் ஒத்துழைப்பு  வழங்குவார்கள் என்றும் மறவன்புலவு சதச்சிதானந்தம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கூட்டு முதலீடோ தனி முதலீடு வர வேண்டும் என வேண்டுகோளை மக்களிடமும் அரசாங்கத்திடமும் முன்வைப்பதாக மறவன்புலவு சதச்சிதானந்தம் மேலும் தெரிவித்திருந்தார்.

தமிழர்களின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடு அவசியம் - மறவன்புலவு சச்சிதானந்தம் சுட்டிக்காட்டு தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அந்நிய முதலீடுகள் அத்தியாவசியமானதென இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சதச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.நேற்றுமுன்தினம் விஜிபி குழுமத்தினுடைய நிறுவுநரும் அதனுடைய பிரதம நிர்வாகியுமான சந்தோசமும் அவருடைய குழுவினரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.இதில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தமிழ்த் தேசத்தின் முதுகெலும்பு பொருளாதாரம், முதல் நிலை உற்பத்தி, வேளான் உற்பத்தி, கடற்தொழில் உற்பத்தி மற்றும் தொழில்கள் வளர்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் தொழில் வளர்ச்சி மட்டுமல்ல வணிகமானது கொள்வனவு, விற்பனை, இலாபம் வங்கிக்கடன்  மற்றும்  பொருளாதார வளர்ச்சி போன்றவற்றையும் உள்ளடக்குவதாக குறிப்பிட்டார்.தமிழ்த் தேச பொருளாதாரம் வளர்ச்சியடைய அந்நிய முதலீடு அத்தியாவசியமானதாகும் என்றும் அதனை உணர்ந்து தன்னால் முடிந்தளவு அந்நிய முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக மறவன்புலவு சதச்சிதானந்தம் குறிப்பிட்டுள்ளார்.வி.ஜி சந்தோசம் இந்தியாவின் முன்னணி வணிகக் குழுமம் என்றும் அவர்கள் இங்கு முதலிடுவார்களானால் அரசும் வணிகர்களும் ஒத்துழைப்பு  வழங்குவார்கள் என்றும் மறவன்புலவு சதச்சிதானந்தம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கூட்டு முதலீடோ தனி முதலீடு வர வேண்டும் என வேண்டுகோளை மக்களிடமும் அரசாங்கத்திடமும் முன்வைப்பதாக மறவன்புலவு சதச்சிதானந்தம் மேலும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement