நேருக்கு நேர் சந்தித்த சீன – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள்!

நேற்றைய தினம் வியாழக்கிழமை நியூயார்க் நகரத்தில் இடம்பெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் s. ஜெய்ஷ்ங்கரும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் சென்றிருந்தனர்.

இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர், சீனா பாகிஸ்தான் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக சுட்டிக்காட்டி இருந்த நிலையில் இரண்டு அமைச்சர்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது, தென்னாப்பிரிக்காவினால் தலைமை தாங்கப்பட்ட இந்த கூட்டத்திற்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கெய் லாவ்ரோவ்வும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் இரண்டு அமைச்சர்களும், பிராந்திய சவால்கள் மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருந்தனர்.

பிரிக்ஸ் அமைப்பானது பிரேசில், ரஷ்யா,  இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவை உள்ளடக்கிய பொருளாதார கூட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சீன வெளிவிவகார அமைச்சர்கள் இருதரப்பு சந்திப்பில் ஈடுபடாத போதும் கூட்டத்தொடரின் போது அருகருகே அமர்ந்து இருந்ததாக அவதானிக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை