சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மணிமேகன் சனசமூக நிலையத்தில் இன்றையதினம் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.



ஸ்ரீ ஆனந்த சீரடி சாய்பாபா அறக்கட்டளையினால், அறக்கட்டளையின் ஸ்தாபகர் நாகராஜா நவரட்ணராஜா அவர்களின் ஏற்பாட்டில் இந்த தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுமார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.