• Apr 24 2024

இலங்கையில் டயர் கொள்வனவில் மோசடி! சிக்கிய பொலிஸ் சாரதி SamugamMedia

Chithra / Mar 18th 2023, 1:36 pm
image

Advertisement

குருநாகல் நகர் பிரதேசத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றுக்கு வாங்கப்பட்ட புதிய வாகன டயரொன்றை திருட்டுத்தனமாக விற்பனை செய்த பொலிஸ் சாரதியொருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையமொன்றின் பேருந்துக்கு பழைய டயரை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய டயரை திருட்டுத்தனமாக பொலிஸ் சாரதியொருவர் விற்பனை செய்துள்ளார்.


புதிதாக கொண்டுவரப்பட்ட டயர் திருகோணமலை பகுதியில் உள்ள மீன் லொறி சாரதி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், பொலிஸ் பேருந்தின் பழைய டயருக்கு பதில் மீள்நிரப்பப்பட்ட சக்கரமொன்றை பொருத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அனில் பிரியந்தவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குருநாகல் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று களமிறக்கப்பட்ட விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் டயர் கொள்வனவில் மோசடி சிக்கிய பொலிஸ் சாரதி SamugamMedia குருநாகல் நகர் பிரதேசத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றுக்கு வாங்கப்பட்ட புதிய வாகன டயரொன்றை திருட்டுத்தனமாக விற்பனை செய்த பொலிஸ் சாரதியொருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் நிலையமொன்றின் பேருந்துக்கு பழைய டயரை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய டயரை திருட்டுத்தனமாக பொலிஸ் சாரதியொருவர் விற்பனை செய்துள்ளார்.புதிதாக கொண்டுவரப்பட்ட டயர் திருகோணமலை பகுதியில் உள்ள மீன் லொறி சாரதி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், பொலிஸ் பேருந்தின் பழைய டயருக்கு பதில் மீள்நிரப்பப்பட்ட சக்கரமொன்றை பொருத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அனில் பிரியந்தவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குருநாகல் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று களமிறக்கப்பட்ட விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement