ஆயுர்வேத மருந்து விற்பனையில் மோசடி

99

ஆயுர்வேத மருந்துகளை, தரமானது என உறுதிப்படுத்தப்படாமல் விற்பனை செய்வதும், விளம்பரம் செய்வதும் மோசடி நடவடிக்கையாகும் என ஆயுர்வேத வைத்திய சபை வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு மருந்துகளை பதிவுகளை மேற்கொள்ளாத எவரும் விளம்பரம் செய்வது ஆயுர்வேத சட்டத்தின்படி குற்றமாகும்.

ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் தரமற்ற மருந்தை சமூக ஊடகங்கள் ஊடாக அல்லது ஏனைய பகிரங்க ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆயுர்வேத வைத்திய சபை குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: