• Mar 29 2024

43 இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மதிய உணவு - ஆதாரத்தை வெளியிட்ட சஜித்! samugammedia

Chithra / Jun 8th 2023, 1:16 pm
image

Advertisement

1993 ஆம் ஆண்டு அன்றைய ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தினால் 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவும் சீருடைகளும் வழங்கப்பட்டன என்பதனை அன்றைய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களை ஆதாரமாக முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அமுலாக்க அமைச்சு 1992-1996 காலகட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை,1994 மத்திய வங்கி அறிக்கை, அப்போது சுகாதார அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவிடம் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற நூலகத்திலோ அல்லது அமைச்சுகளிலோ இவ்வாறான பழைய தரவுகள் எதுவும் இல்லை எனவும், வங்குரோத்தான நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் இவ்வாறான தரவு சார்ந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

அத்தோடு சுதந்திரத்திற்குப் பிறகு இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட நலன்புரி மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளைப் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாத விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

தந்தை செய்த அனைத்தையும் பின்பற்றும் மகன் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை ரணசிங்க பிரேமதாச செய்த நல்ல விடயங்கள் முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறைபாடுகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

நீங்கள் செய்வதை எல்லாம் உங்கள் மகன் செய்கிறானா என்பது எனக்குத் தெரியாது. நான் அதைச் செய்வதில்லை. நான் ஒரு சுதந்திரமான நபர். எனக்கு சுயாதீன மனமும் சுயாதீன எண்ணமும் உள்ளது.

எனக்கென்று ஒரு இதயமும் மனசாட்சியும் இருக்கிறது. பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது எனது மறைந்த தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் செய்த நல்லதொரு செயலாகும்.

தொழிற்சங்கத் தலைவர்களிடம் என் தந்தை செய்ததைக் குறிப்பிட்டுள்ளீர்கள். நானும் அவ்வழியே செல்ல வேண்டும் என்கிறீர்கள். அதுதான் அர்த்தம்.என்றார்.


43 இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மதிய உணவு - ஆதாரத்தை வெளியிட்ட சஜித் samugammedia 1993 ஆம் ஆண்டு அன்றைய ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தினால் 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவும் சீருடைகளும் வழங்கப்பட்டன என்பதனை அன்றைய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களை ஆதாரமாக முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அமுலாக்க அமைச்சு 1992-1996 காலகட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை,1994 மத்திய வங்கி அறிக்கை, அப்போது சுகாதார அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவிடம் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.பாராளுமன்ற நூலகத்திலோ அல்லது அமைச்சுகளிலோ இவ்வாறான பழைய தரவுகள் எதுவும் இல்லை எனவும், வங்குரோத்தான நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் இவ்வாறான தரவு சார்ந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.அத்தோடு சுதந்திரத்திற்குப் பிறகு இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட நலன்புரி மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளைப் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாத விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.தந்தை செய்த அனைத்தையும் பின்பற்றும் மகன் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தனது தந்தை ரணசிங்க பிரேமதாச செய்த நல்ல விடயங்கள் முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறைபாடுகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.நீங்கள் செய்வதை எல்லாம் உங்கள் மகன் செய்கிறானா என்பது எனக்குத் தெரியாது. நான் அதைச் செய்வதில்லை. நான் ஒரு சுதந்திரமான நபர். எனக்கு சுயாதீன மனமும் சுயாதீன எண்ணமும் உள்ளது.எனக்கென்று ஒரு இதயமும் மனசாட்சியும் இருக்கிறது. பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது எனது மறைந்த தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் செய்த நல்லதொரு செயலாகும்.தொழிற்சங்கத் தலைவர்களிடம் என் தந்தை செய்ததைக் குறிப்பிட்டுள்ளீர்கள். நானும் அவ்வழியே செல்ல வேண்டும் என்கிறீர்கள். அதுதான் அர்த்தம்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement