பாடசாலையில் இருந்து இடைவிலகியோருக்கும் இலவச தடுப்பூசி!

266

பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் தங்களுக்குரிய பைசர் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் தங்குக்குரிய பைசர் தடுப்பூசிகளை சனி, ஞாயிறு தினங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு எந்தப் பணமும் செலுத்தத்தேவையில்லை. அவ்வாறு யாராவது பணம் கோரினால் முறைப்பாடு செய்யுங்கள்.

இதேவேளை,வடக்கில் சில இடங்களில் பாடசாலை இடைவிலகிய மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு பணம் கோரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: