‘எப்போதும் பாசிட்டிவ்வா இருப்போம் குமாரு’ கேபியை கொண்டாடிய நண்பர்கள்!

206

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் தேர்வு பெற்ற ஐவரில் ஒருவராக கேபி இருந்தார் என்பது தெரிந்ததே.

இருப்பினும் பிக்பாஸ் கொடுத்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு அவர் போட்டியிலிருந்து விலகினார் என்பதும், அவரது முடிவு புத்திசாலித்தனமானது என்று சக போட்டியாளர்கள் மற்றும் அவரது நண்பர்களும் பாராட்டினார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கேபியை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிறப்புடன் வரவேற்ற நிலையில் அவருக்காக ஒரு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை அவரது நண்பர்கள் சமீபத்தில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

அந்த நிகழ்ச்சி தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என கேபி குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் பாசிட்டிவ் ஆக இருப்போம் குமாரு’ என்ற வாசகத்துடன் கூறிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த கேபி, இந்த சிறப்பான வரவேற்பு குறித்து கூறியபோது ’பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனது வாழ்நாளில் நான் செய்த ஒரு சாதனையாக கருதுகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த எனக்கு நண்பர்களும் குடும்பத்தினரும் என்னை ஆச்சரியப்படுத்திய வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் அழகானது.

அவர்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். கேப்ரில்லாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: