• Dec 01 2022

ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழங்கள்!

Tamil nila / 2 months ago
image

இரவில் சில பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி இரவில் பழங்களை சாப்பிடுவதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும் .

தினமும் ஆப்பிளை உட்கொள்வது நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் ஆப்பிளை இரவில் சாப்பிடக்கூடாது.

இரவில் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆப்பிளில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நார்ச்சத்து உள்ளது.

ஆனால் இரவில் ஆப்பிள் சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக, சாப்பிட்ட பிறகு தூங்கும் போது, வாயு அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது பலன் தராது. பலர் உடற்பயிற்சி செய்த பிறகு மாலையில் வாழைப்பழத்தை சாப்பிடுகிறார்கள்.

ஷேக்காக இருந்தாலும் சரி, ஃப்ரூட் சாலட்டாக இருந்தாலும் சரி, இரவில் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. இரவில் வாழைப்பழங்களை உட்கொண்டால், அது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும், அதனால் தூக்கம் வருவதில் சிக்கல் இருக்கலாம். அதனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது.

இரவில் சப்போட்டா சாப்பிட கூடாது. சப்போட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகம். எனவே சப்போட்டா சாப்பிட்டால், அது உடலின் சர்க்கரை அளவையும், ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, இரவில் சப்போட்டா சாப்பிட கூடாது.

பிற செய்திகள்