எரிபொருள் தட்டுப்பாடு: தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை!

116

தற்போது நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹரகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்கள் எரிபொருள் பாவனையை குறைத்துக்கொள்ள வேண்டும்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் டொலர் நெருக்கடியை இதன் மூலம் தீர்க்க முடியும்.

நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மக்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

இலங்கை போன்ற எண்ணெய் உற்பத்தி அல்லாத எந்தவொரு நாடும் எரிபொருள் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

இது இலங்கைக்கு மாத்திரம் விசேடமான பிரச்சினையல்ல. எரிபொருள் பாவனையை முடிந்தவரை மட்டுப்படுத்துவதே சிறந்த தீர்வாகும்.

இதன் மூலம் நாட்டிலிருந்து வெளியேறும் டொலர்களின் அளவைக் குறைக்க முடியும்.

இயன்றவரை பயணத்தை குறைத்து, எப்போதும் இணையம் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு!