வவுனியாவில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

67

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில், தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 11 குடும்பங்களை சேர்ந்த 37 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 19 குடும்பங்களை சேர்ந்த 66 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 3 பேரும்,

வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 19 குடும்பங்களை சேர்ந்த 76 பேருமாக வவுனியா மாவட்டத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேரும் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக மேலதிக தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.

வவுனியாவில் 1476.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: