• Apr 25 2024

உள்ளூராட்சி தேர்தல் குறித்து வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Tamil nila / Jan 29th 2023, 8:10 pm
image

Advertisement

உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய, உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகத்திற்கு இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவினால் இந்த அறிவிப்பு வெளிட்பபட்டுள்ளது.


இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்த, வேட்பாளர்களின் பிரசார பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.


உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அச்சிடுதல் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்தார்.


அச்சுப் பிழைகள், வாக்குச் சீட்டு திருத்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் சரிபார்த்து, அதன் துல்லியத்தை தேர்தல் ஆணைக்குழு மீள் ஆய்வு செய்து, அச்சிடுதல் தொடர்பான பணிகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.


பின்னர், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அடுத்த வாரம் நடைபெற உள்ளது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சிடும் பணி முன்னதாக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தல் குறித்து வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய, உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகத்திற்கு இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவினால் இந்த அறிவிப்பு வெளிட்பபட்டுள்ளது.இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்த, வேட்பாளர்களின் பிரசார பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அச்சிடுதல் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்தார்.அச்சுப் பிழைகள், வாக்குச் சீட்டு திருத்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் சரிபார்த்து, அதன் துல்லியத்தை தேர்தல் ஆணைக்குழு மீள் ஆய்வு செய்து, அச்சிடுதல் தொடர்பான பணிகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.பின்னர், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அடுத்த வாரம் நடைபெற உள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சிடும் பணி முன்னதாக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement