கூகுள் போட்டோஸ்-ஜூன் 1 ஆம் திகதி முதல் கட்டணமாம்!

1179

கூகுள் போட்டோஸ் வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது.

எதிர் வரும் ஜூன் 1 ஆம் திகதிக்கு பின்னர், கூகுள் போட்டோஸ் வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைவதாக தெரிவிக்கப்படுகிறது..

அதாவது, 15 ஜிபிக்கு மேல் புகைப்படங்கள், வீடியோக்களை சேமிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

கூகுள் போட்டோஸ் தளத்தில் 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே படம், வீடியோக்களை சேமிக்க முடியும்.

அதற்கு மேல் பாவனை கூடினால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

கூகுள் ஒன்றின் அடிப்படை கட்டணமாக 100 ஜிபி திட்டத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது.

இதற்கு மாதத்திற்கு ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, குடும்பத்துடனும் ஸ்டோரேஜை பகிரலாம். 200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் காணப்படுகிறது.

இதற்கு மாதம் ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 ஆகும்.

2டிபிக்கு மாதத்திற்கு ரூ.650 மற்றும் வருடத்திற்கு ரூ.6,500 செலுத்த வேண்டும்.

அத்துடன் 10டிபிக்கு, மாதத்திற்கு ரூ.3,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூகுள் போட்டோசுக்கு மாற்றாக டிஜிபாக்ஸ், டீகோ, மைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவ் உள்ளிட்டவற்றில் சேமிப்பு திட்டத்திற்கான கட்டணம் குறைவு என்பதால் பயனர்கள் அதில் மாறத் தொடங்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://youtube.com/watch?v=hzuvx0ifn6k

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: