நவம்பர் மாதம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்; தயாராகுமாறு மருத்துவமனைக்கு அறிவுறுத்தல்!

508

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கிவிட்டது.

மேலும் உலகை அச்சுறுத்தி வருகிற இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு முடிவு கட்ட உலகிலுள்ள பல வல்லாதிக்க நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கி, அதன் சோதனைகளை பல கட்டங்களாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக வருகிற ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

தவிர, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி வெகு விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பன போன்ற செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும் லண்டனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு ஆஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்தின் முதல் பேட்ச் வரும் நவம்பர் முதல் வாரத்தில் வழங்கப்படும் எனவும் இதற்கு தயராகுமாறும் மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக இங்கிலாந்தின் பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.