சமூக இணையத்தங்கள் ஊடக தற்போது மக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இலங்கையில் தேவையற்ற வகையில் தங்கியிருந்து இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகளை மேற்கொண்டதாக கூறப்படும் 2 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இவர்கள் கல்கிசை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.
சட்ட விதிகளுக்கு மாறாக நாட்டிலிருந்து கொண்டு இணையத்தளத்தின் மூலம் நிதி மோசடியில் ஈடுப்பட்ட சில வெளிநாட்டவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களிடம் எவரும் சிக்காதிருப்பதற்காக இணையத்தளத்தின் ஊடாக பண கொடுக்கல் வாங்கலில் ஈடுப்படும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிசை பிரதேசத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த இவர்களின் விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு இணையத்தள மோசடிகளில் ஈடுப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விசேட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இவர்கள் பயன்படுத்திய கணனி, கையடக்க தொலைபேசிகள் தற்பொழுது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.
நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் இலங்கையில் இருந்து கொண்டு இணையத்தளம் மூலமாக மோசடிகள் செய்வது அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
விசேடமாக சிலரது பிறந்த நாள், திருமண வைபவம் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட நிகழ்வுகளின் போது பல்வேறு வகையில் மின்னஞ்சல்கள் மூலம் தகவல்களை அனுப்பி அதனை பெறுவோருக்கு விசேட பரிசுகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
அல்லது வெளிநாடுகளில் இருந்து விசேட பரிசு ஒன்று உங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது என்று ஒருதொகை பணத்தை இதற்காக வைப்பீடு செய்யுமாறு கூறி, வைப்பீடு செய்யும் பணத்தை விட பல மடங்கு பெரியளவில் பணம் கிடைக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு பொதுமக்கள் ஏமாந்து போகின்றனர் என்றும், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- அதிரவைக்கும் ‘வாட்ஸ் அப்’-இன் புதிய ரூல்ஸ்!… ‘பெப்ரவரி 8’க்கு பின் என்ன நடக்கும்?.. இது குறித்து வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள்?
- போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ். இந்துக்கல்லூரி மாணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பு
- தமிழர் நிலப்பரப்பில் பாரிய தங்கப் புதையல் கண்டுபிடிப்பு
- திடீர் பல்டி; துணை வேந்தர் சொல்வதில் உண்மை இருக்கிறதா?
- யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு; பல பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் இணைவு!
- அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
- நாளை முற்றாக முடங்கவுள்ள வடக்கு, கிழக்கு; முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!
- யாழ்.பல்கலை விவகாரம்; அரசாங்கத்திற்கெதிராக அங்கஜன் கடும் கண்டனம்?!
- யாழ். பல்கலை துணைவேந்தர் தொடர்பில் சித்தார்த்தன் வெளியிட்ட ரகசியம்?
- யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
- நாம் மன்னிப்பு கோருகிறோம்; யாழ்.பல்கலையிலிருந்து வெளியான அறிக்கை!
- காணொலி வாயிலாக சாணக்கியன் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
- EPDP-க்கு நேரடி சவால் விடுத்துள்ள இளைஞன்!
சமூக ஊடகங்களில்:
- ஃபேஸ்புக் : சமூகம் முகநூல்
- டிவிட்டர் : சமூகம் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : சமூகம் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : சமூகம் யு டியூப்