உலகிலேயே புதுமையான சோளம்! பலர் அதிர்ச்சியில் நம்ப மறுத்த நிஜம்!!

580

தானியங்களிலேயே அதிக புரதச் சத்து மிக்க ஒன்றுதான் சோழம். பொதுவாக இடைவெப்ப வலய மற்றும் ஈரவலய நாடுகளில் அதிகமாக பயிரிடப்படும் சோளம் சுவையும் சத்துக்களும் தன்னகத்தே நிறைவாகவே கொண்டுள்ளது.

இலங்கையில் பொதுவாக மஞ்சள் நிற சோளமே அதிகம் பயிரிடப்படுவதுடன் இது அவித்தும் பொரியாக்கியும் பொடியாக்கியும் உண்ணப்படுகின்றது.

கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ எனும் சத்து மா சோள மாவினையும் பிரதான கூட்டுப்பொருளாக கொண்டதாகும்.

இத்தகைய சோளத்தின் இன்னுமொரு வடிவத்தை பெரும்பாலானோர் கண்டிருக்கமாட்டீர்கள். அதுதான் கண்ணாடி ஜெம் சோளன்.

மிகவும் வண்னமயமான தனித்தனி தானியங்களைக்கொண்ட சோளப்பொத்தி பார்ப்பவரையே மயக்கிவிடும் தன்மைகொண்டதாகும்.

இந்த சோளம் என்பது இடைப்பட்ட காலத்தில் உயிரியல் கலப்புப்பிறமாக்கல்மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றுதான்.

முதன்முதலில் இந்தவகைச் சோளம் பற்றிய செய்திகள் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியானபோது முழு உலகுமே அதிர்ந்துபோனது. இதுவரை கண்டிராத வடிவத்தில் சோளனைக் கண்டதால் பலருக்கும் ஆச்சரியம். பலர் நம்ப மறுத்தனர்.

ஆனால் சிறிது நேரத்தில் அரிசோனா பிராந்தியத்தை தளமாகக்கொண்ட ஒரு விதை நிறுவனம் இவ்வகையான சோள விதைகளை நல்ல விலைக்கு விற்றுத்தீர்த்தது.

என்னதான் இருந்தாலும் இந்த சோள விதைகளைக் கண்டுபிடித்த விவசாயி கார்ல்ஸ் பார்ன்ஸ் என்பவராவார். தனது கண்டுபிடிப்புக்கேற்ப இவற்றின் முன்னைய இன சோளன்களை தனிமைப்படுத்தினார். பின்னர் அவற்றை கலப்புப்பிறப்பாக்கம்செய்யத்தக்க வகையில் நட்டார்.

அத்துடன் நின்றுபோகாமல் மேலும் பல வண்ணமயமான சோழ விதைகளை ஒன்றாக்கு நட்டார். அதன் பயனாகவே இன்றைய இந்தச் சோளன் உருமாறியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: