கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு இலங்கை செல்ல வேண்டும்! – சுனில்

82

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு இலங்கை செல்ல வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

நாட்டின் தேசிய வளங்களை கடனை அடைக்கும் நோக்கில் விற்பனை செய்யக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நிதி தர மதிப்பீட்டு நிறுவனங்களால் இலங்கை தரமிறக்கப்படுவது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் இயலாமையைக் காட்டுவதாகும்.

எனவே, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக இந்தத் தடையை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான வழிகளை அரசாங்கம் ஆராய வேண்டும்.

நிலுவையிலுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிர்வகிப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2022 இல் இலங்கையின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும்!