• Apr 25 2024

ChatGPT-க்கு போட்டியாக 180 நாடுகளில் அறிமுகமான கூகிள் Bard! samugammedia

Tamil nila / May 12th 2023, 10:24 am
image

Advertisement

ChatGPT-க்கு போட்டியாக 180 நாடுகளில் கூகிள் Bard அறிமுகமாகியுள்ளது.

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு செயலியான BARD-யை இந்தியா உட்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அப்படியே தந்துவிடும் அம்சம் கொண்டது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI தான் இந்த கூகுள் பார்ட்(Bard).

முன்னதாக, சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற AI அறிமுகமான சில வாரங்களிலேயே பத்து லட்சம் பயனர்களை ஈர்த்தது. தற்பொழுது, Chat GPT-க்கு போட்டியாக மீண்டும் AI-களுக்கான களத்தில் பார்ட் இறக்கிவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பார்ட் முதலில் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும், சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூகுள் அந்த கோளாறுகளை தற்போது சரிசெய்து பார்ட் AI-யை இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பார்ட் ஆங்கிலம், ஜப்பானியம் மற்றும் கொரிய மொழிகளில் கிடைக்கிறது. மேலும், 40 மொழிகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு உரையை உருவாக்கலாம், அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கலாம். உங்கள் கேள்விகளுக்கு விரிவான மற்றும் தகவலறிந்த விதத்தில் பதிலளிக்கும் திறனையும் பெற்றுள்ளது. பார்ட் இன்னும் மேம்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ChatGPT-க்கு போட்டியாக 180 நாடுகளில் அறிமுகமான கூகிள் Bard samugammedia ChatGPT-க்கு போட்டியாக 180 நாடுகளில் கூகிள் Bard அறிமுகமாகியுள்ளது.கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு செயலியான BARD-யை இந்தியா உட்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அப்படியே தந்துவிடும் அம்சம் கொண்டது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI தான் இந்த கூகுள் பார்ட்(Bard).முன்னதாக, சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற AI அறிமுகமான சில வாரங்களிலேயே பத்து லட்சம் பயனர்களை ஈர்த்தது. தற்பொழுது, Chat GPT-க்கு போட்டியாக மீண்டும் AI-களுக்கான களத்தில் பார்ட் இறக்கிவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பார்ட் முதலில் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும், சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூகுள் அந்த கோளாறுகளை தற்போது சரிசெய்து பார்ட் AI-யை இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.பார்ட் ஆங்கிலம், ஜப்பானியம் மற்றும் கொரிய மொழிகளில் கிடைக்கிறது. மேலும், 40 மொழிகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு உரையை உருவாக்கலாம், அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கலாம். உங்கள் கேள்விகளுக்கு விரிவான மற்றும் தகவலறிந்த விதத்தில் பதிலளிக்கும் திறனையும் பெற்றுள்ளது. பார்ட் இன்னும் மேம்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement