• Apr 19 2024

கமெரா வசதிகளுடன் களமிறங்கும் கூகுள் மேப் - இதெல்லாம் பண்ணலாமா இனி ?

harsha / Dec 17th 2022, 11:07 pm
image

Advertisement

Google map இன் வினைத்திறனை அதிகரிப்பதற்கான புதிய நுட்பம் ஒன்று இணைக்கப்படவுள்ளது.

வழமையாக google map பயன்படுத்தி ஒரு இடத்திற்கு செல்லும் போது தொலைபேசியில் உள்ள நீல புள்ளியின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு பொதுவாக நாம் பயணம் செய்கிறோம்.

தொலைபேசி தெற்கு பக்கமாக திரும்புமாறு கூறினால் இருக்கின்ற இடத்தை பொறுத்து தெற்கு பக்கம் எது என்பதை புரிந்து கொள்வது நமக்கு கடினமாக இருக்கும். ஒரு திசையில் சென்று அதே திசையில் நீல புள்ளி நகர்கிறதா என்பதை பார்த்து பின்னர் அது நகராத பட்சத்தில் மறுபுறம் திரும்பி செல்வதை அனேகமாக நாம் செய்திருப்போம்.

ஆனால் இனிவரும் நாட்களில் அந்த சிரமம் இருக்கப் போவதில்லை. இதற்கான புதிய வழிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் அடிப்படையில் தொலைபேசியின் கேமராக்கள் வழிபடுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடியதாக இருக்கும்.

இதன்படி கூகுள் மேப்பினை பயன்படுத்தும் போது தொலைபேசியின் கேமராக்களையும் ஆன் செய்து வைக்க வேண்டும். அதன்படி நாம் இருக்கின்ற இடம் கேமராவில் தெரியும் போது நாம் திரும்ப வேண்டிய திசையும் google மேப்பினால் சுட்டிக்காட்டப்படும்.

இதன் மூலம் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம்? எந்த கட்டிடம் எங்கே உள்ளது நாம் எந்த திசையில் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதும் குறித்த இடங்களின் பெயர்களும் கணப்பொழுதில் எம்மால் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

 அது மாத்திரமன்றி சுற்றி வர உள்ள முக்கியமான இடங்களும் நமது கேமரா ஊடாக தெரியும் போது அதில் சுட்டிக்காட்டப்படும். உதாரணமாக ஒரு கட்டடத்தில் இருக்கும் உணவு விடுதிகள் சினிமாக்கள் போன்றவை நமது கேமராவில் அவை தெரியும் போதே அவற்றுடன் பெயர் குறிப்பிடப்பட்டு தெரியக்கூடியதாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 இதில் விசேட இணைப்பு ஒன்றாக நபர்களை வழிப்படுத்தும் சிறிய பொம்மைகளை இணைப்பதற்கும் தற்போது தொழில் நுட்ப நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாகவும் அறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் முன்னே வழிகாட்டியாக குறித்த உருவங்கள் செல்லும்போது இலகுவாக அவற்றை பின்தொடர்ந்து மக்கள் செல்லக்கூடியதாக இருக்கும்.

 இந்த தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுவாக ஜிபிஎஸ் மாத்திரம் போதுமானதாக இல்லை எனவும் இதற்காக விஷுவல் பொசிஷனிங் சிஸ்டம் எனும் vps தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதற்கு இணங்க நாம் இருக்கின்ற இடத்தில் சுற்றிவர உள்ள கட்டிடங்களை அவதானித்து அவற்றின் முக்கியமான புள்ளிகளை குறித்து வைத்து அவற்றை கொண்டு ஒரு நபர் எந்த இடத்தில் இருக்கின்றார் என்பதை துல்லியமாக அறிந்து அங்கே google map செயல்படுத்தப்படும்.

இதன் மூலம் அவர் கேமராவில் ஒரு பிரதேசத்தை காட்டும் போது அந்த பிரதேசத்திற்குரிய மேப் செயல்படுத்தப்பட்டு அவரை நேரடியாக வழிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

கமெரா வசதிகளுடன் களமிறங்கும் கூகுள் மேப் - இதெல்லாம் பண்ணலாமா இனி Google map இன் வினைத்திறனை அதிகரிப்பதற்கான புதிய நுட்பம் ஒன்று இணைக்கப்படவுள்ளது. வழமையாக google map பயன்படுத்தி ஒரு இடத்திற்கு செல்லும் போது தொலைபேசியில் உள்ள நீல புள்ளியின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு பொதுவாக நாம் பயணம் செய்கிறோம். தொலைபேசி தெற்கு பக்கமாக திரும்புமாறு கூறினால் இருக்கின்ற இடத்தை பொறுத்து தெற்கு பக்கம் எது என்பதை புரிந்து கொள்வது நமக்கு கடினமாக இருக்கும். ஒரு திசையில் சென்று அதே திசையில் நீல புள்ளி நகர்கிறதா என்பதை பார்த்து பின்னர் அது நகராத பட்சத்தில் மறுபுறம் திரும்பி செல்வதை அனேகமாக நாம் செய்திருப்போம். ஆனால் இனிவரும் நாட்களில் அந்த சிரமம் இருக்கப் போவதில்லை. இதற்கான புதிய வழிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் அடிப்படையில் தொலைபேசியின் கேமராக்கள் வழிபடுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடியதாக இருக்கும். இதன்படி கூகுள் மேப்பினை பயன்படுத்தும் போது தொலைபேசியின் கேமராக்களையும் ஆன் செய்து வைக்க வேண்டும். அதன்படி நாம் இருக்கின்ற இடம் கேமராவில் தெரியும் போது நாம் திரும்ப வேண்டிய திசையும் google மேப்பினால் சுட்டிக்காட்டப்படும். இதன் மூலம் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் எந்த கட்டிடம் எங்கே உள்ளது நாம் எந்த திசையில் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதும் குறித்த இடங்களின் பெயர்களும் கணப்பொழுதில் எம்மால் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அது மாத்திரமன்றி சுற்றி வர உள்ள முக்கியமான இடங்களும் நமது கேமரா ஊடாக தெரியும் போது அதில் சுட்டிக்காட்டப்படும். உதாரணமாக ஒரு கட்டடத்தில் இருக்கும் உணவு விடுதிகள் சினிமாக்கள் போன்றவை நமது கேமராவில் அவை தெரியும் போதே அவற்றுடன் பெயர் குறிப்பிடப்பட்டு தெரியக்கூடியதாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் விசேட இணைப்பு ஒன்றாக நபர்களை வழிப்படுத்தும் சிறிய பொம்மைகளை இணைப்பதற்கும் தற்போது தொழில் நுட்ப நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாகவும் அறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முன்னே வழிகாட்டியாக குறித்த உருவங்கள் செல்லும்போது இலகுவாக அவற்றை பின்தொடர்ந்து மக்கள் செல்லக்கூடியதாக இருக்கும். இந்த தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுவாக ஜிபிஎஸ் மாத்திரம் போதுமானதாக இல்லை எனவும் இதற்காக விஷுவல் பொசிஷனிங் சிஸ்டம் எனும் vps தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதற்கு இணங்க நாம் இருக்கின்ற இடத்தில் சுற்றிவர உள்ள கட்டிடங்களை அவதானித்து அவற்றின் முக்கியமான புள்ளிகளை குறித்து வைத்து அவற்றை கொண்டு ஒரு நபர் எந்த இடத்தில் இருக்கின்றார் என்பதை துல்லியமாக அறிந்து அங்கே google map செயல்படுத்தப்படும். இதன் மூலம் அவர் கேமராவில் ஒரு பிரதேசத்தை காட்டும் போது அந்த பிரதேசத்திற்குரிய மேப் செயல்படுத்தப்பட்டு அவரை நேரடியாக வழிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement