‘கோட்டா கோ கம’ தாக்குதல் – 6 எம்.பிக்களிடம் இன்று வாக்குமூலம்!

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோரிடமே வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

வாக்குமூலங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஐந்து குழுக்கள் நேற்றைய தினம் நாடாளுமன்றத்திற்குச் சென்றிருந்த போதிலும், அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 சந்தேக நபர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை