• Apr 19 2024

அநீதியான வரித் திட்டத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை!

Sharmi / Jan 31st 2023, 3:07 pm
image

Advertisement

நியாயமற்ற வரி அதிகரிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்திற்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படாவிடின், எதிர்வரும் வாரத்திலிருந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய தினம் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்து கடிதமொன்று அனுப்பியுள்ளதாக தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை துறைமுகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாளையதினம் ஒன்றுகூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொது ஊழியர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோசன் கொரகானஹே தெரிவித்துள்ளார்.

அநீதியான வரித் திட்டத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை நியாயமற்ற வரி அதிகரிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்திற்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படாவிடின், எதிர்வரும் வாரத்திலிருந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.இன்றைய தினம் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்து கடிதமொன்று அனுப்பியுள்ளதாக தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை துறைமுகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாளையதினம் ஒன்றுகூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொது ஊழியர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோசன் கொரகானஹே தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement