பிரபல இயக்குனர் வீட்டில் இன்று காலை நடந்த பெரும் சோகம்!

224

வெண்ணிலாகபடிக்குழு, நான்‌ மகான்‌ அல்ல, பாண்டிய நாடு மற்றும்‌ பல படங்களை இயக்கியவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் சுசீந்திரன்‌. இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நேற்று பொங்கல்‌ அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்‌ கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் இல்லத்தில் இருந்து துக்க செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவரது தாயார்‌ ஜெயலக்ஷ்மி (62) இன்று காலை திடீர்‌ மாரடப்பால்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்‌பட்டு சுமார்‌ 11 மணியளவில்‌ காலமானார்‌. இடம் ‌ஒட்டன்சத்திரம்‌. சுசீந்திரன்‌ தந்தை பெயர்‌ நல்லுசாமி. இவரது தம்பி, தயாரிப்பாளர்‌ ‘நல்லுசாமிபிக்சர்ஸ்‌’ சரவணன்‌. மேலும்‌ ஒரு சகோதரரும்‌ ஒரு சகோதரியும்‌ உள்ளனர்‌. இந்நிலையில் அன்னாரது உடல்‌ தகனம்‌ இன்று மாலை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: