உலகமே கொரோனா தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

இத்தாலியில்  பச்சை  நிறத்தில் நாய் குட்டியொன்று பிறந்துள்ளது. இச்சம்பவம்,  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இத்தாலியின் பட்டாடா நகரை சேர்ந்த கிறிஸ்டின் மலோசி எனும்  கிறிஸ்டின் மலோசி, பப்பி ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 

அதன் பெயர்  ஸ்பெலாச்சியா. கருவுற்று இருந்த ஸ்பெலாச்சியா கடந்த 9ஆம் திகதி ஐந்து குட்டிகளை ஈன்றெடுத்ததுள்ளது. 

இந்த ஐந்து குட்டிகளில் ஒரு குட்டி பச்சை நிறத்தில் பிறந்திருக்கிறது. 

பொதுவாக பச்சை நிறத்தில் நாய்களை பார்ப்பது மிகவும் அரிதானது. 

எனவே ஸ்பெலாச்சியாவின் இந்த பச்சை நிற நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த பச்சை நிற நாய் குட்டிக்கு பிசாட்சோ என பெயர் சூட்டியுள்ளார் கிறிஸ்டின்.

அதாவது பிஸ்தா நிறத்தை குறிக்கும் வகையில் நாய் குட்டிக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். 

இந்த கொடிய கொரோனா காலத்தில், பச்சை நிறம் என்பது நம்பிக்கையையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் நிறமாக தான் கருதுவதாக விவசாயி கிறிஸ்டின் மலோசி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

பொதுவாக விலங்கினங்கள்  உறுப்புகளினால் வித்தியாசப்பட்டு பிறக்கின்ற உயிரினங்களே அதிகமே. 

இரண்டு தலை, ஆறு கால், நான்கு கண் என்று மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உயிரினங்கள் பிறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.