Gym workout வீடியோவை வெளியிட்டு வருத்தப்படும் நடிகர் அருண் விஜயை பாருங்க !!

0
41

இந்த கொரோனா ஊரடங்கில் படங்கள் மற்றும் சீரியல்களின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே இருந்து சோசியல் மீடியாவில் தங்கள் ரசிகர்களிடையே இந்த கொடிய தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் நடிகைகள் யோகா, உடற்பயிற்சி, சமையல் போன்றவற்றை செய்வது, பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது உள்ளிட்ட தங்களுக்கு பிடித்த செயல்களை செய்து நேரத்தைக் கழிக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜயும் வீட்டிலேயே பல ஒர்க்அவுட்களை செய்துவருகிறார். அந்த வீடியோக்களையும் அவர் தொடர்ந்து சோசியல் மோடியாவில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் , அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு பழைய ஒர்க்அவுட் வீடியோவின் மூலம், அவர் தனது ஜிம் ஒர்க்அவுட் ஐ எந்த அளவிற்கு இழந்து வருத்தப்படுகிறார் என வெளிப்படுத்தியுள்ளார்.